
posted 11th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். ஆயர் இல்லத்துக்கு எதிர்கட்சி தலைவர் விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாஸ நேற்று (10) திங்கட்கிழமை காலை யாழ். ஆயர் இல்லத்துக்கு சென்று யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளாரை சந்தித்திருந்தார்.
இதன்போது, மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடினர்.
13ஆவது திருத்தம் ,காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, பொது வேட்பாளர் குறித்த அருட்தந்தையர்களின் கேள்விகளுக்கு சஜித் பிரேமதாஸ பதிலளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)