யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வழமை போன்று இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு 2023.04.11ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உயர்திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வுகளின் வரிசையில் கிராஅத் மௌலவி எம். அஸ்லம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. ரம்ழான் ஓர் பண்பாட்டுப் பாசறை எனும் தலைப்பில் மௌலவி எம்.ஏ.சி.எம். அஜ்மல் அவர்களும், ரமழானும் சகவாழ்வும் எனும் தொனிப்பொருளில் மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) அவர்களும் உரைகளை நிகழ்த்தினர். யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம். நிஸ்தாக் அவர்களின் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது. அதான் மௌலவி பி.எம். அஹ்சன் (அஸ்ரபி) அவர்களால் நிகழத்தப்பட்டது.

நிகழ்வின் போது யாழ் மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் யாழ்ப்பாணம் மர்யம் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தினால் நினைவுக் கேடயம் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள், இளைஞர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More