
posted 14th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மாநாடு

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொள்ள உள்ளார். இந் நிகழ்வில் சிறப்புரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் ஆற்றவுள்ளார். இதன் போது கலை நிகழ்வுகள், விசேட உரைகள் என்பன இடம்பெற்று மாநாட்டின் தீர்மானங்களும் அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)