யாழில் எரிபொருள் பற்றாக்குறையால் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் மீனவசமூகம்
யாழில் எரிபொருள் பற்றாக்குறையால் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் மீனவசமூகம்

திரு அன்னராசா

“யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சனை மீனவர் சமூகத்துக்கு பாரதூரமான பிரச்சனையாக மாறியிருக்கின்றது. அண்ணளவாக மண்ணெண்ணெய் பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு மீனவருக்கு 30 லீற்றர் தொடக்கம் 40 லீற்றர் வரை வழங்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறைகூட எரிபொருள் வழங்கப்படுவதில்லை.” இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடல் கடந்த தீவுகளான எழுவைதீவு, அனலைதீவு போன்ற பகுதிகளில் ஒரு கிழமைக்குக் கூட மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் 13 ஆம் திகதி ஒரு மீனவருக்கு 20 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டபோதும் இன்றுவரை எந்தவிதமான எரிபொருளும் வழங்கப்படவில்லை.

யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை 6250 கண்ணாடி இளைநார் படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகளுக்கு ஒரு நாளைக்கு அண்ணளவாக நாடு சீரான நிலையில் காணப்பட்ட போது ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 500 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்பட்டது.

அதேபோல யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை டீசலில் பயன்படுத்தப்படும் 600 ஒரு நாள் படகுகள் இருக்கின்றன. அப்படகுகளுக்கு 30 ஆயிரம் லீற்றர் டீசல் தேவைப்படுகிறது.

அதேபோல 30இற்கு உட்பட்ட பல நாள் கல படகுகள் இருக்கின்றன. அவையும் டீசல் எரிபொருளில்தான் இயங்குகின்றன. அதேபோல, குடாக்கடல் நீரேரியில் எம்.ரி.ஆர்.வி. என்ற படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு சர்வசாதாரணமாக 2500 லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது.

தற்போது உள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையின்படி ஒரு கிழமைக்கு 20-30 லீற்றர் எரிபொருள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு, மிகவும் குறைவாக வினியோகிக்கப்படும் எரிபொருளினால் 50 வீதமான தொழிலாளர்களால் மட்டுமே கடற்தொழிலுக்கு செல்லக்கூடியதாக செல்லக்கூடியதாக உள்ளது.

அத்தோடு தற்போது காற்று, கடல் குழப்பம், எரிபொருள் பெறுவதில் உள்ள இடர்நிலை காரணமாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

அத்தோடு தற்போதைய நிலை எமது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்ணளவாக 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால், சாதாரணமாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் மீனவர்கள் மாத்திரம் கடலுக்குச் தொழில் சென்று கடல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். தற்போது மீன் மீன்பிடி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது.

பாணின் விலை மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்கள் ஒரு நேர உணவைத் தவிர்த்துள்ள நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதே நிலை மேலும் தொடருமாக இருந்தால், எமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு, பட்டினியால் சாகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகலாம் என்று அச்சம் தெரிவித்தார்.

இந்த எரிபொருள் பிரச்னைக்கு இனியாவது அதிகாரிகள் தீர்வு பெற்றுக் கொடுக்க முன்வருவார்கள் ஆக இருந்தால் எமது நிலையை சற்று மாற்றி அமைக்க முடியும் என்றார்

யாழில் எரிபொருள் பற்றாக்குறையால் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் மீனவசமூகம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY