
posted 12th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
மழை வேண்டி தொழுகை
நாட்டில் மழை குறைவாக இருப்பதால் மழை இல்லாத பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் மழை வேண்டி தொழுகை நடத்தும்படி ஸ்ரீலங்கா ஜம்மிய்யத்துல் உலமா (SLJU) கேட்டுக்கொள்கிறது.
இது பற்றி ஸ்ரீலங்கா ஜம்மிய்யத்துல் உலமாவின் அமீர் முபாறக் மௌலவி கபூரி, நத்வி தெரிவித்ததாவது,
நாட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மழை பற்றாக்குறை காரணமாக வரட்சி காணப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிப்பை நோக்கியுள்ளது.
ஆகவே மழைவேண்டி பள்ளிவாயல்களில் தொழுகை நடத்துவதுடன் ஒவ்வொருவரும் தம் தொழுகையில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அருள் மழை பெய்விக்கும் படி இறைவனை பிரார்த்திக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)