
posted 18th November 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் புதன்கிழமை (17.11.2021) மேலும் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் நாளாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பாக வெளியிடும் நாளாந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
புதன்கிழமை (17.11.2021) மன்னார் மாவட்டத்தில் மேலும் 20 கொவிட் தொற்றாளர்கள் பி.சீ.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையில் இனம் காணப்பட்டள்ளனர்.
இவர்களில்;
மன்னார் பொது வைத்தியசாலையில் 05 நபர்களும்
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 நபர்களும்
மடுவில் 04 பேரும்
வங்காலை வைத்தியசாலையில் 03 பேரும்
பெரிய பண்டிவிரிச்சான். எருக்கலம்பிட்டி மற்றும் பேசாலை வைத்தியசாலைகளில் தலா ஒருவருமே
தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் (11.2021) 274 பி.சி.ஆர். பரிசோதனைகளும். 2431 அன்டிஜென் பரிசோதனைகளும், மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றிலிருந்து கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளதாக பணிப்பாளரின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2771 ஆக உயர்ந்துள்ளது என அவரின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள மரணமும் இதுவரை 25 ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ