
posted 28th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மூதூரில் விபத்து
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் - நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோச் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் தோப்பூர் - பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த எம். ஜுனைட் என்ற ஓட்டோச் சாரதியே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு மூதூர் போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களையும் மூதூர் பொலிஸுக்கு கொண்டு சென்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)