முல்லைத்தீவில் கரிநாள் அனுஷ்டிப்பு

சுதந்திர தினமான நேற்று சனிக் கிழமை (04)முல்லைத்தீவு மாவட்டத்தில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று தென்னிலங்கையில் கொண்டாடப்பட்ட அதேசமயம், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் நேற்று கரிநாளாக இந்நாளை கடைப்பிடித்தனர்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு

போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு கொடிகள் தொங்க விடப்பட்டு கறுப்பு தினமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான கவனவீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நிறைவடைந்தது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் கரிநாள் அனுஷ்டிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More