
posted 9th May 2022
சர்வ கட்சி மாநாடு என்ற ரீதியில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதத்தில் கட்சிகளை உடைத்து அமைச்சர் பதவிகள் வழங்கி அரசாங்கத்தின் பயணத்தை மேற்கொள்ள எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்பதை நாடு தேசிய மட்டத்தில் முகங்கொடுத்து வருகின்ற நிலைமையினால் எல்லோரும் தற்போது நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்கை சட்டத்தரணிகள் சங்க கட்டிடத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (8) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அங்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரமுகர்களுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது மேலும் கூறியதாவது,
நேற்றைய தினம் ஜனாதிபதி எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நம்பிக்கை கொண்டு ஒரு சாரார் ஊடாக இவ் விடயம் முன் எடுக்கப்படுவதாலும்,நம்பிக்கை மீதான புரிந்துணர்வு வெற்றிடம் தொடர்ந்தும் உள்ளதாலும், இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சி சார்ந்து அனைத்து கட்சிகளும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த முடியுமாக உள்ளது.
மேலும், குறிப்பாக இவ்விடயம் அரசியல் அபிலாஷைகள் குறித்தான ஜனாதிபதியின் நடவடிக்கையைப் பொறுத்தே முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது.
அரசாங்கம் இதனைக் காலம் தாழ்த்தி மேற் கொள்ள வந்திருப்பது கவலைக்குரியதாகும். நாடும், மக்களும் பலதரப்பட்ட இன்னல்களுக்குள் சிக்கிய பின்னரே அரசாங்கத்துக்கு ஞானம் பிறந்திருக்கிறது.
சர்வ கட்சி மாநாடு என்ற ரீதியில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக கட்சிகளை உடைத்து பதவிகள் வழங்கி அரசாங்கத்தின் பயணத்தை மேற்கொள்ள எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்திருப்பது முக்கிய விடயமாகும்.
இதனை கடந்த ஏப்ரல் முதலாம் வாரத்திலாவது மேற்கொண்டிருந்தால் நாடு இவ்வாறாகப் படு பாதாளத்தில் விழுந்திருக்காது.
இப்போது மக்களின் குரோதங்கள் மேலோங்கி விட்டன.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் நிலைமை எவ்வாறானது என்பது புரியும்.
பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஏறத்தாழ 150 க்கு கிட்டிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதி சபாநாயகர் மறு தினமே பதவி விலகியுள்ளார்.
இது எதனை உணர்த்துகின்றது என்றால், அவர்கள் தங்களது சொந்த ஊருக்கே செல்ல முடியாத நிலைமையையே எடுத்து காட்டுகின்றது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY