முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீபாவளி வாழ்த்து

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி என்ற அவலநிலை நீங்கிஇ ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கிஇ பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது தீபாவளி வாழ்த்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது தீபாவளி வாழ்த்தில் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது

இன்று உலகையே அச்சுறுத்திவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியோடுஇ பல முன்னேற்றகரமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். அனைவரதும் அபிலாசைகள் நிறைவேறிஇ இலங்கைத் திருநாடு சுபீட்சம் மிக்கதொரு தேசமாக மலரும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இருட்டு வழிக்கு ஒளி இருந்தால் அதுவே நாம் செல்லும் வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு இறை ஆசி என்னும் அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள்.

இந்துக்கள் அனைவராலும் பக்தியோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் இந்தத் தீபாவளித் திருநாளில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தேசிய ஒற்றுமையைப் போற்ற இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுவதென்பதுஇ எம்முள் இருக்கும் அறியாமை என்னும் இருள் அகன்று அகவொளி பிரகாசிக்க வேண்டும் என்பதற்கான குறியீடே. இந்நன்னாளில் ஏற்றப்படும் தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சமிக்ஞையாகவே எண்ணப்பட வேண்டும்.

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மாதாவின் பிள்ளைகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்! இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீபவளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீபாவளி வாழ்த்து

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More