
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முதிரை மரங்கள் கடத்தல் வவுனியாவில் முறியடிப்பு
வவுனியா ஓமந்தையில் முதிரை மரக்கடத்தலை முறியடித்துள்ளதாக வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா கல்மடுவில் இருந்து இரண்டு வாகனங்களில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டன.
இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 மரக்குற்றிகளும் கடத்தலுக்கு பயன்படுத்திய கப் மற்றும் பட்டா வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா மாவட்ட குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)