முகம்மது தம்பியின் மறைவுக்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
முகம்மது தம்பியின் மறைவுக்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

கே. முகம்மது தம்பி (SLEAS)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் செயலாளரும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான எம்.ரி.எம். சப்ராஸின் தந்தை கே. முகம்மது தம்பி (SLEAS) சுயீனமுற்றிருந்த நிலையில் மரணித்த செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியின் தலைவராகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றினார். தான் வகித்த பதவிகள் மூலம் கல்விப் பணிக்கு தன்னாலான அனைத்து சேவைகளையும் இவர் மனமுவந்து செய்துவந்தார்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபுடன் நெருக்கமான உறவைப் பேணிய முகம்மது தம்பி, முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார். இவர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சகோதரியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸா, இன்று 12 மணியளவில் நிந்தவூருக்கு எடுத்துசெல்லப்படும். மஹ்ரிப் தொழுகையின் பின்னர் பொதுமக்கள் ஜனாஸாவை பார்வையிடமுடியும். நாளை வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் நிந்தவூர் மையவாடியில் ஜனாஸா நல்லக்கம் இடம்பெறும்.

அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுநாளை நாளில் மேலான சுவர்க்கம் கிடைக்கம் பிரார்த்திப்போமாக!

முகம்மது தம்பியின் மறைவுக்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More