posted 1st November 2022
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாகவுள்ள வீதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர்.
இதற்கு இடையூறு ஏற்படுத்திய ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவத்தினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் சில மணி நேரத்தின் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமமான பணியை முன்னெடுத்தனர்
அத்துடன் கோப்பாய் போலீஸ் பொறுப்பதிகாரி ராணுவ பொறுப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)