மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளுக்கு அனுமதி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டு வந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிறு (05) தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்திற்கு பக்தர்கள் சென்றுவர ஆரம்ப காலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டு வந்த போதிலும் பின்னர் பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த தமது பூர்வீக ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பில்

கலந்துரையாடி பொதுமக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் இந்துக்களின் சிறப்பு நாளான தைப்பூச தினமான 05.02.2023 அன்று ஆலயத்திற்கு பக்கத்ரகள் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதற்கிணங்க தைப்பூச வழிபாடுகள் மற்றும் சிறப்பு பொங்கல் நிகழ்வுகளை பொதுமக்கள் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் உதவி நிர்வாக பொறுப்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் குறித்த பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாக பொறுப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான அன்பு – ஜெயபாலசிங்கம் மற்றும் குறித்த பிரதச சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என 50இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பூசை வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே பாதுகாப்பு தரப்பினரும் இன்றைய தினம் பொதுமக்கள் சென்றுவர அனுமதி வழங்கப்பட்ட வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளுக்கு அனுமதி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)