மருத்துவப் பொருள்கள் நன்கொடை செய்த  தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம்

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மல்லாவி - அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு 5,07,458 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன -

மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு 5,07,458 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

இவ் உதவித் திட்டத்தில் மருத்துவர் செந்தில் குமரன் அவர்களும் மற்றும் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மருத்துவப் பொருள்கள் நன்கொடை செய்த  தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)