
posted 8th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் விபத்தில் அருட்தந்தை பலி
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குநர் அருட்தந்தை கே. ஜொனார்த்தனன் அடிகளார் உயிரிழந்தார்.
தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் விபத்து இடம்பெற்றது.
விபத்தில், படுகாயமடைந்த அவர் மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி


எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)