
posted 5th February 2023
இலங்கை சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
04.02.2023 அன்று சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு ஆரம்பமாகியபோது மன்னார் பாலத்திலிருந்து மாணவர்கள், சாரணியர்கள், பொலிசார் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வீரர்கள் ஆகியோரின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.
இவற்றைத் தொடர்ந்து தேசிய கொடி அரச அதிபரால் ஏற்றப்பட்டு தமிழ், சிங்கள் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.
பின் சமாதானம் நல்லுறவு வேண்டி புறாக்கள், பலூன் பறக்க விடப்பட்டன.
அதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நான்கு சர்வ மத தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
சுதந்திர தினத்தன்று பிறந்த இரண்டு சிரேஷ்ட பிரஜைகளின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வும், அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் சுதந்திர தின உரையும் , தேசிய பிரஜைகளுக்கான கௌரவிப்பும் , இத்தினத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல் வைபவமும், மரம்நாட்டுதலும் இடம்பெற்றன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)