மன்னார் தீவு காற்றாலை முடிவுறு அறிக்கை - பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்

மன்னார் தீவில் காற்றாலை செயற்திட்ட முடிவுறு அறிக்கைக்காக பிரஜைகள் குழுவை சந்தித்தார் பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் ஜீவகன்

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின் காற்றாலை திட்டத்தை முடிவுறு அறிக்கை ஒன்றை சமர்பிக்கப்பட வேண்டியுள்ளதால் இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபையை யாழ் பல்கலைக்கழக தலைமையக சமூகவியல் திணைக்கள பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் ஜீவகன் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடல் மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சனிக்கிழமை (30.04.2022) பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலானது மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் காற்றாலைகளால் இத் தீவு மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக மன்னார் பிரஜைகள் குழு மக்கள் சார்பாக குரல் கொடுத்து வருகின்றது.

ஆகவே, இது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கும் நோக்குடன் யாழ் பல்கலைக்கழக தலைமையக சமூகவியல் திணைக்கள பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் ஜீவகன் இவ் ஆளுநர் குழுவை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பேராசிரியர் இங்கு கருத்துக்கள் தெரிவிக்கையில் மன்னார் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இம் மின் காற்றாலை பற்றி மக்கள் என்ன கருத்துடன் இருக்கின்றார்கள்?

இவ் விடயம் தொடர்பாக ஏற்கனவே பலதரப்பட்டவர்கள் பல தரப்பட்ட இடங்களில் பலதரப்பட்ட மக்களுடன் மன்னாரில் கலந்துரையாடியுள்ளனர். ஆதில் நானும் பங்குபற்றியிருந்தேன்.

அந்த கூட்டங்களில் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதால் பல தரப்பட்ட பாதிப்புக்கள் இருப்தால், இப் பகுதியில் இவற்றை நிர்மானிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

எங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில், இது தொடர்பான ஒரு அறிக்கையை தரும்படி கேட்டுள்ளனர். ஆதற்கான ஒரு ஒப்பந்தமும் செய்துள்ளோம். இதற்காக நாங்கள் மக்களிடம் சம்மதத்தை பெற்றுத் தருவோம் என்றல்ல, மாறாக, மக்கள் மற்றும் இங்குள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் மூலமே அறிக்கை சமர்பிக்க இருக்கின்றோம்.

ஏற்கனவே, நாங்கள் இம் மாவட்டத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். தொடர்ந்து இப் பகுதியிலள்ள 10 கிராம அலுவலகர்கள் பிரிவிலுள்ள மக்களைச் சந்தித்து இதற்கான முடிவுறு அறிக்கை ஒன்றை தயாரித்து அவர்களிடம் கையளிக்க இருக்கின்றோம்.

எங்களது இந்த முடிவுறுத்தல் அறிக்கையில் நீங்கள் மற்றும் மக்கள் எதைச் சொல்லுகின்றார்களோ அவற்றைத்தான் நாங்கள் அறிக்கை இடுவோம்.

இதுவரைக்கும் நாங்கள் சமூதாயத் தலைவர்கள், படித்தவர்கள், எந்திரிகள், அரச அதிபர், பிரதேச செயலாளர், கடற்தொழில் திணைக்களம் இவ்வாறு பலருடன் எற்கனவே கலந்துரையாடியுள்ளோம்.

இதைத் தொடர்ந்து நாங்கள் கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடனும் கலந்தாலோசித்துள்ளோம்.

இன்னும் கிராம மக்களுடனும், பனையை சார்ந்து தொழில் புரிவோருடனும், கடற்தொழில் செய்வோருடனும் கலந்தரையாடலை மேற்கொண்டிருந்தோம். அவர்கள் இக் காற்றாலையால் உள்ள பாதிப்புக்களை எமக்கு தெளிவுபடுத்தினர்.

அவ்வாறு இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தோம்.

அனைவரிடமிருந்து பெற்ற அபிப்பராயங்களின் படி, காற்றலை செயற்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளே, வரக்கூடிய நன்மைகளை விட அதிகமானது என உறுதியாகக் கூறினார்கள்.

இறுதியாக, 10 கிராம மக்களினதும் உணர்வுகளையும் கவனத்திற் கொண்டு, அவர்களையும் சந்தித்த பின்பு இறுதியாக அறிக்கையை முடிவுரைக்கவுள்ளோம்.

யுத்தத்துக்குப் பின் இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களுக்கு கொழும்பிலிருந்துதான் நிபுணத்துவம் கொண்டவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

ஆனால் இம்முறை இச் செயற்திட்ட அறிக்கையை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. காரணம், இப் பல்கலைக்கழகம் நடுநிலையுடன் இருந்து செயல்படும் என்ற நம்பிக்கையே என தெரிவித்தார்.

மன்னார் தீவு காற்றாலை முடிவுறு அறிக்கை - பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY