மன்னார் கட்டுக்கரைக்குளத்தை கவனிக்க வேண்டிய அவசியம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் கட்டுக்கரைக்குளத்தை கவனிக்க வேண்டிய அவசியம்

கட்டுக்கரைக்குளத்தைச் சுற்றியுள்ள காடுகளை அழித்து அவ் இடங்களை தங்கள் வசப்படுத்தி வருபவர்களால் கட்டுக்கரைக்குளம் அழிந்து போகும் நிலை உருவாகின்றது. இதை தடுத்து நிறுத்துபவர் யார்? இதன் திணைக்கள அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாது காணப்படும் பல்வேறுவிதமான பிரச்சனைகள் தொடர்பாக சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றபோதே அருட்பணி நவரட்ணம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

அருட்பணி நவரட்ணம் அடிகளார் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

மன்னார் தீவுப் பகுதியில் உள்ள அதிகமான பிரச்சனைகள் பல தரப்பினாலும், உள்ளுர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. இதையிட்டு எனக்கு மகிழச்சி.

ஆனால், எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால் மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இருக்கின்ற பிரச்சனைகள் இங்கு வெளிக் கொணரப்படாது இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமாக திகழும் கட்டுக்கரைக்குளம் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு குளம் என்பது குளமும், புலவும் ஆகும்.

குளம் இல்லாத புலவு இல்லை. குளத்தை சரியான முறையில் வைத்திருக்காவிடில் விவசாயிகளுக்கு பாதிப்பு. மாறாக கால்நடை தண்ணீர் குடித்துவிட்டு செல்லவே இந்த குளம் உதவும்.

கட்டுக்கரைக் குளத்தை கவனிக்கப்படாது இருப்பது இது சார்ந்த திணைக்களம் மற்றது மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின்மையே ஆகும்.

கட்டுக்கரைக்குளத்தின் எல்லை எங்கு இருக்கின்றது என ஒரு சாதாரண மனிதரிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியாது. இதற்கென நில அளவைத் திணைக்களம் இருக்கினறது. சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் நில அளவைகள் காணப்படுகின்றன.

கட்டுக்கரைக் குளத்தின் எல்லைகள் எதுவரைக்கும் இருக்கின்றது என்பது இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியாது இருப்பதால் அதைக் காப்பாற்ற முடியாது. அபகரிப்பின் மூலம் குறுகிக் கொண்டு போகும் நிலையே உருவாகின்றது.

கட்டுக்கரைக்குளம் கட்டுக்கரையாக இருந்தால் மேய்ச்சல் நிலப் பிரச்சனைகள் வருவதற்கு இடமிருக்காது. இப்பொழுது கட்டுக்கரைக்குளத்தை யார் ஆளுகின்றார்கள் என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கின்றது.

தற்பொழுது சிலர் கட்டுக்கரைக்குளத்தின் காணிகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். இதனால் வெளியிலுள்ள விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் நிறைய உருவாகும் என்பதில் ஐயமில்லை.

இங்கு குளங்கள் பல அழிந்துவிட்டன. இவற்றை தங்கள் வசம் வைத்துக் கொண்டு பலர் சண்டித்தனம் காட்டும் நிலைகளும் காணப்படுகின்றது.

கட்டுக்கரைக்குளத்தைச் சுற்றி காடுகள் காணப்பட்டன. தற்பொழுது அந்த காடுகள் யாவும நாளுக்கு நாள் அழிந்து கொண்டு செல்லுகின்றன. இவற்றை பாதுகாப்பது யார்?

இந்திய மீனவர் பிரச்சனை, இலங்கை மீனவர் பிரச்சனை என்றால் இரு வெவ்வேறு நாட்டவர் என்று சொல்லலாம். மணல் அகழ்வு என்று சொன்னால் இரு வெவ்வேறு மாவட்டத்தவர் என கூறலாம். ஆனால் கட்டுக்கரைக்குளத்தை அழித்துச் செல்பவர் யார்? ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்தான்.

கட்டுக்கரைக்குளத்தின் வெள்ளைக்காரன் கையளித்த உறுதி இருக்கின்றது. வரைபடம் இருக்கின்றது. இவற்றை மக்கள் முன் எடுத்து வாருங்கள். இல்லையேல் கட்டுக்கரைக்குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் யாவும் அழிந்து கட்டக்கரைக்குளம் இல்லாத நிலையே உருவாகும்.

ஆகவே வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மன்னார் கட்டுக்கரைக்குளத்தை கவனிக்க வேண்டிய அவசியம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)