மன்னாரில் 100 வயதைத் தாண்டிய வயோதிபரை அதிகாரிகள் கௌரவித்தனர்

மன்னாரில் 100 வயதை கடந்த வயோதிபரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் மற்றும் அதிகாரிகளும் திங்கள்கிழமை (20.06.2022) சந்தித்து கௌரவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 100 வயதை கடந்த வயோதிபர் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சாளம்பன் கிராமத்தை சேர்ந்த மனுவேல் சந்தான் என்பவரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் சகிதம் அவரின் இல்லத்தில் சந்தித்து கௌரவித்தனர்.

மனுவேல் சந்தானின் அழகான குடும்பத்தில், நான்கு மகள்களும், இரண்டு மகன்களும், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் என 49 உறுப்பினர்கள் உள்ளனர்.
அத்துடன், முதியவரைச் சந்தித்த அதிகாரிகள் அவரிடம் ஆசீர் பெற்றனர்.

மேலும் இம் முதியவருக்கு கனடாவில் வாழும் பிரகாஷ் செல்வராஜா என்பவர் ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 100 வயதைத் தாண்டிய வயோதிபரை அதிகாரிகள் கௌரவித்தனர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY