
posted 15th May 2022
நாட்டில் நிலவி வரும் இந்த கடினமான பொருளாதார சிக்கலில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழந்து கொண்டிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தால் மன்னார் மாவட்டத்திலுள்ள 543 வது இராணுவ பிரிகேட் ஊடாக இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன
கடந்த சனிக்கிழமை (14.05.2022) மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வானது நான்காவது விஜயபாகு காலால் படையினரே இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இவ் உலர் உணவுப் பொதிகள் ஒவ்வொன்றிலும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, இரண்டு தேங்காய் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY