மன்னாரில் நடைபெற்ற இருவரின் மரணத்தில் மர்மமா?

மன்னார் பேசாலை பகுதியிலிருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் பிரயாணித்த இருவர் மரணித்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மர்மமான இந்த மரணத்துக்கான காரணத்தை கண்டு பிடிப்பதில் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம் மர்மமான மரணம் தொடர்பான ஆரம்ப விசாரனை மூலம் தெரிய வருவதாவது;

திங்கள் கிழமை (30.05.2022) இரவு மன்னார் பகுதியிலுள்ள பேசாலை பகுதியிலிருந்து தங்கள் சொந்த வாகனத்தில் சாரதி உட்பட நான்கு நபர்கள் கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், இவர்கள் கொழும்புக்கு செல்வதற்கு முன் இப் பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் விடுதியில் ஒன்று சேர்ந்து விருந்து உண்டபின் வீட்டுக்குச் சென்று இரவு 11 மணியளவில் கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், இவர்கள் கொழும்புக்கு செல்லுகின்றபோது மன்னார் உயிலங்குளம் இடத்தை நெருங்கியபோது காரில் பயணம் செய்த நான்கு பேரில் இருவர் காருக்குள்ளேயே மரணத்தை தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணித்த இருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தபொழுது தாங்கள் கொண்டு வந்த போத்தல் ஒன்றிலிருந்த பானத்தை அருந்திக் கொண்டு வந்ததாகவும் ஆரம்ப விசாரனை மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் நிலையை கண்ட சாரதி உடன் மீண்டும் வாகனத்தை மன்னாருக்கு திருப்பி மன்னார் பொது வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அப்பொழுது இருவரும் இறந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்கள் பேசாலை காட்டாஸ்பத்திரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.மசூத் (வயது 35) மற்றையவர் பேசாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை மகேந்திரன் பிரதீப் (வயது 26) ஆகியோரே இறந்தவர்களாவர்.

இவர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பாக இவர்களுடன் பயணித்த சாரதி உட்பட இருவர் பொலிஸ் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் தங்களுடன் எடுத்துவந்து அருந்திய பானம் தொடர்பாக சந்தேகம் நிலவியுள்ளதாகவும், ஆரம்ப விசாரனையில் தெரிய வந்துள்ளதுடன், இதில் பொலிசார் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மன்னாரில் நடைபெற்ற இருவரின் மரணத்தில் மர்மமா?

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More