
posted 10th March 2022
அடித்தள இழுவை மடியினை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்தல் 2017 ஆம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதால் இவ்வகையான தொழில் முறையினை அபிவிருத்தி செய்யவோ ஊக்குவிக்கவோ வேண்டாம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு மன்னார் மாவட்ட உதவி கடற்தொழில் பணிப்பாளர் ஐ.எம்.ஜி.எஸ். சந்திரநாயக்க எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் அடித்தள இழுவை மடியினை பயன்படுத்தி மீன்பிடி தொழிலானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம் 2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம் 2017.07.25ம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் இத்தொழில் தடைசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இத்தொழில் தொடர்பாக தங்களது கிராமங்களில் இவற்றை ஊக்குவிக்கவோ அல்லது புதிதாக மீனவர்களை ஈடுபடுத்தவோ அத்துடன் இவ்வகையான தொழில் முறையினை அபிவிருத்தி செய்யவோ வேண்டாம் என மன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிமுனை பேசாலை தோட்டவெளி புனித பீற்றர் மற்றும் தலைமன்னார் புனித லோறன்ஸ் மீனவ கிராமிய அமைப்புக்களுக்கும்
பேசாலை, பெரியகரிசல். பள்ளிமுனை, தலைமன்னார் மேற்கு மற்றும் தோட்டவெளி மீனவ கூட்டுறவுச் சங்கங்களுக்கும் மற்றும் மன்னார், எருக்கலம்பிட்டி பேசாலை கடற்தொழில் பரிசோதகர்களுக்கும் இவ் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் தொடர்பில் இவ் இழுவைப்படகு தொழிலுக்கு மாற்றீடாக வேறு எவ்வகையான தொழிலினை மேற்கொள்ள முடியும் அல்லது நடைமுறைப்படத்தவதற்கு உத்தேசிக்கும் இத் தொழிலாளர்கள் அவற்றினை மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு எழுத்துமூலம் சமர்பிக்கவும் வேண்டப்பட்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House