மன்னன் பண்டாரவன்னியனின் 219ஆவது நினைவு நாள்

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 219ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்றுவியாழக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவு தின நிகழ்வு வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

காலை 8.15 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாகவிருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவித்ததுடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள்,

சமூக செயற்பாட்டாளர்களால் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் தமிழ்மணி அகளங்கனால் நினைவுரை நிகழ்தப்பட்டது. அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏனைய அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னன் பண்டாரவன்னியனின் 219ஆவது நினைவு நாள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More