மனைவி, பிள்ளைகளை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குடும்பஸ்தர்

வடமராட்சிக்கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவில் குடும்பத்தகராறு காரணமாக வாளினால் கணவன் அவரது மனைவி, மகள்கள் இருவரையும் வாளால் வெட்டிப் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் 15-12-2022 நண்பகல் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் சி. இராசறஞ்சினி மகள் சி. பவித்திரா ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

நாகர்கோயில் வடக்கு பகுதியில் வசித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக குறித்த குடும்பதில் முரண்பாடுகள் அதிகரித்த நிலையில் அங்கும் தலையில் தாக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு உறவினர்களால் தாய் மற்றும் மகள்கள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

நேற்றைய தினம் குறித்த சம்பவத்தின் போது கணவன் நிறை மது போதையிலேயே இவ்வாறு தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரியவருவதுடன் வாளால் வெட்டப்பட்ட நிலையில் அவர்களால் அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில் அங்கு திரண்ட மக்களால் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அனுப்பப்பட்டு கிளிநோச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தகராறில் ஈடுபட்ட நபரை கலைத்துப் பிடித்து கட்டிப்போட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிளிநோச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் இந்த வெட்டுச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி, பிள்ளைகளை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குடும்பஸ்தர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More