
posted 28th May 2022
நாட்டில் மண்ணெண்ணை விநியோக சீர்கேடு காரணமாகப் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
சமையல் எரிவாயு விநியோக தாமதம் மற்றும் இடை நிறுத்தம் காரணமாக தமது வீடுகளிலும், தொழில் நிலையங்களிலும் மண்ணெண்ணை அடுப்புகளைப் பாவிக்க முற்படும் மக்கள் மண்ணெண்ணைக்காகவும் நிரப்பு நிலையங்களில் தினமும் தவம் கிடக்க வேண்டிய பரிதாப நிலமை நீடித்து வருகின்றது.
குறிப்பாக கொழும்பு போன்ற நகரங்களில் தொடர்மாடி வீடுகளில் வாழும் மக்கள் விறகு அடுப்புக்களையும் பயன்படுத்த முடியாதுள்ள நிலையிலும், எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலும் மண்ணெண்ணை அடுப்புகளையே பயன்படுத்த வேண்டிய அவசிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய நிலையில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ளவென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் திரண்டு நீண்ட கியூ வரிசைகளிலும் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய நிலமையில் மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றமடையும் மக்கள் வீதிமறியல் போராட்டங்களில் ஈடுபடவும் முற்பட்டுவருவதும் வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பெற்றோல் எரிபொருளுக்கான கியூ வரிசைகள் தற்சமயம் சற்று குறைவடைந்து வருகின்ற போதிலும் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடித்த வண்ணமுள்ளனர்.
நிந்தவூரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்கென பொதுமக்கள் பகல், இரவாகத் திரண்ட வண்ணமேயிருந்தனர்.
இராணுவத்தினரின் கண்காணிப்புடன் இரவு 10 மணிக்கு மேலும் குறித்த பிரபல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்ட நிலையிலும், பெண்களும் தனிக்கியூ வரிசையில் விடப்பட்டனர்.
இத்தகைய அப்பாவி மக்களின் அவஸ்த்தைக்கும், அவலத்திற்கும் விடிவே இல்லையா? எனப்பலரும் அங்கலாய்க்கின்றனர்.
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY