மட்டக்களப்பிற்கு தேவையில்லை

இரண்டு நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (22) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமானவர்கள் பலரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், அரியநேத்திரன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிகழ்வின் போது இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் உறுப்புரிமை இளைஞர்களும், தமிழரசு கட்சியின் அங்கத்துவத்தினை மேலும் பலரும் பெற்றிருந்தனர்.

மட்டக்களப்பிற்கு தேவையில்லை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More