மஞ்சல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் மண்டைதீவு ஆகிய கடற் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை (19) இரவு மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் 989 கிலோகிராம் (ஈரமான எடை) கொண்ட மஞ்சளைக் கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் இரண்டு மன்னார் வாசிகளையும் 2 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படை செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது சுமார் 496 கிலோ 054 கிராம் மஞ்சள் 14 சாக்குகளில் கடத்தி வரப்பட்டதையும், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட சுமார் 48 கிலோ 030 கிராம் மஞ்சள் 01 சாக்கு கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இதே நேரம் கடற்படையினர் 19 ஆம் தேதி குருநகருக்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர். சோதனையில் 445 கிலோ 800 கிராம் எடையுள்ள மஞ்சள் நிரப்பப்பட்ட 12 சாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களையும் டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்த 33, 51 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்ப்ட்ட மஞ்சள் (ஈரமான எடையில் சுமார் 989கிலோ மற்றும் 884கிராம் எடையுள்ளது) மற்றும் 02 டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More