மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிலும் துயரத்திலும் தானும் பங்கேற்பதாகவும், அவரது மறைவு தமக்கு பெரும்கவலை தருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில்;

“ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்கள் ஒரு முன்மாதிரியான ஆட்சியாளராகத் திகழ்ந்தவர். மிகவும் அர்ப்பணிப்புள்ள ஆட்சியாளரான அவரை, ஐக்கிய அரபு அமீரக மக்கள் இன்று இழந்து தவிக்கின்றனர். அவருடைய ஆட்சியின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் விரிவானதும், விரைவானதுமான அபிவிருத்தியை ஈட்டிக்கொண்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ், அவருடைய சேவைகளையும் நற்கருமங்களையும் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தைப் பரிசளிப்பானாக!” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More