
posted 25th January 2023
மன்னார், பெரியமடுவை பிறப்பிடமாகக் கொண்ட Dr.A.L.தஸ்தகீரின் மறைவு கவலை தருவதாகவும், அவரது மறைவு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாபச் செய்தியில்,
"சுமார் 40 வருடங்களாக கொழும்பு, வாழைத்தோட்டப் பிரதேசத்தில் வைத்தியராகப் பணியாற்றி வந்த மர்ஹும் Dr. தஸ்தகீர், கொழும்பு மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி மன்னார், வவுனியா உட்பட இதர பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்தவித பேதமுமின்றி வைத்தியப் பணியாற்றி வந்தவர்.
சிறந்த சமூக சேவையாளரான இவர், கொழும்பு, வாழைத்தோட்ட பிரதேசத்தில் பிறப்பு இறப்பு பதிவாளராக இருந்து, அந்தப் பிரதேச மக்களின் பணிகளை இலகுபடுத்தியவர். மக்களின் வேண்டுகோள்களை துரிதகதியில் நிறைவேற்றி, அவர்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்தவர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)