போர் காலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் பரல்களில் மீட்பு

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளரான கந்தசாமி என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது காணியினை துப்பரவு செய்த போது, காணிக்குள் புதைக்கப்பட்டு இருந்த சில பரல்களை அடையாளம் கண்டு அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் காணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு நீதவான் ரி. சரவணராஜா முன்னிலையில், பொலிஸ் அதிகாரிகள், படை அதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பரல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த 7 பரல்களில் இருந்தும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் காணப்பட்டது. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் காணி உரிமையாளர் தெரிவிக்கையில்;

தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தை அகற்றும்போது நிலத்தில் பரல்கல் புதைக்கப்பட்டு இருந்தன.

இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம் காணப்படவில்லை. விவசாய நடவடிக்கைக்கு நிலத்தை பண்படுத்தும்போதே இவை தென்பட்டுள்ளன என்றார்.

போர் காலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் பரல்களில் மீட்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More