
posted 28th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
போதைப் பொருளுடன் 9 பேர் கைது
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய (27) தினம் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இருவரும் இன்று (28) காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடனும், ஏனையோர் 2 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயினாடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 8 கிராம் 750 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் சுதுமலை, சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)