
posted 8th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொருத்து வீட்டுத்திட்டத்தின் வீடுகள்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்தின் வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தது.
எட்டு பார ஊர்திகளில் பொருத்து வீடுகளுக்கான பொருட்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த பொருத்து வீடுகளைக் கொண்ட பார ஊர்திகளைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 64 வீடுகள் இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)