பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டத்தில் கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் எனப பெருமளவானோர் பங்கேற்றனர்.

“நாட்டில் பொருட்களின் விலைஅதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாத்திப்புக்களை சந்தித்து வருகின்றனர். எமது குழந்தைகள் பட்டினியால் வாடும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எமது மாணவர்களின் கல்வியே கேள்விக்குறியாகியுள்ளது.

எரிபொருளுக்காக வரிசையில் நின்றே நாட்கள் கழிகின்றன. இந்த நிலை எப்போது மாறப்போகின்றதோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்ப்பட்டுள்ளது. எனவே, நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது அனைவரதும் தலையாய கடமை. பிரதேசவாதம் பாராது சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதம் மறந்து மக்களாகப் போராடுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் - என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து வெளியிட்டனர்.

அத்துடன்,

“கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா”

“கோட்டா - மஹிந்த அரசே ஆட்சியை விட்டு வெளியேறு”

“போராடும் மக்களை சுட்டுக்கொல்லாதே”

என்று எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் எந்தியிருந்ததுடன், அவற்றை கோஷங்களாகவும் எழுப்பினர்.

போராட்டத்தின்போது பூந்தோட்டம் சந்தியில் உள்ள அனைத்து வியாபாரநிலையங்களும் மூடப்பட்டன. அத்துடன், கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More