
posted 5th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொது மக்கள் பார்வைக்கு கல்முனை மாநகர பட்ஜெட்
கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்ட அறிக்கை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வரவு - செலவுத் திட்ட அறிக்கையை அலுவலக நேரத்தில் பொது மக்கள் பார்வையிட முடியும்.
மேலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பிலான தமது கருத்துகளை எதிர்வரும் 11ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)