
posted 27th April 2022
புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தமது உறுப்பினர்களுக்கு பேரீத்தம் பழம் வழங்கும் செயற்திட்டமொன்றை அமுல் நடாத்தி வருகின்றது.
இதன்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி - உலமா கட்சியின் காத்தான்குடி கிளை உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் சொந்த நிதியிலிருந்து பேரீத்தம்பழம் வழங்கி வைக்கும் நிகழ்வு காத்தான்குடியில் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் ஐ எல் அன்வர் தலைமையில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் நோன்பு கால பேரீத்தம் பழங்களுக்காக விண்ணப்பித்திருந்தும் அது கவனத்திற்கொள்ளப்படாமையால் தனது சொந்த நிதியிலிருந்து உறுப்பினர்களுக்கு பேரீத்தம் பழங்களை வழங்கி வருவதாக கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)