பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கைக்குக் கண்டனம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கைக்குக் கண்டனம்

காதலிப்பதற்கும், பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை என்ற பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் தெரிவிக்கையில்;

காதலிப்பதும், கட்டிப் பிடிப்பதும் தடையல்ல என்ற கருத்து ஒழுக்கமாக வாழ நினைக்கும் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவ‌துட‌ன் ம‌த‌, க‌லாச்சார‌ விழுமிய‌ங்க‌ளை கொண்ட‌ ந‌ம‌து நாட்டுக்கு அப‌கீர்த்தியை ஏற்ப‌டுத்துவ‌துமாகும்.

எனவே ஒழுக்கக்கேடான இது போன்ற செயற்பாடுகள் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும்.

கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மத்தியில் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே இவ் அறிக்கயை நாம் பார்க்க முடிகிறது. ஏனெனில் தகாத செயற்பாடுகளின் ஆரம்பமே இந்த நடவடிக்கைகள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்துடன், பல்கலைக்கழகத்தில் கற்கும் தமது பிள்ளைக‌ளை, சகோதர, சகோதரிகளை பார்வையிடச் செல்வோருக்கு இந்த அறிக்கை பாரிய சிக்கலையும் ச‌ங்க‌ட‌த்தையும் ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற தீய செயல்கள் அனைத்து மாணவர்களையும் கெட்டவர்களாக, ஒழுக்க‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ச் சித்தரிக்கிற‌து.

அதேபோன்று காதலின் பெயரால் ஒவ்வொரு மரத்தடியிலும் சோடி சோடியாக இருந்து பகிரங்கமாக லீலைகளில் ஈடுபடுவதை பார்க்கும் பெண் பிள்ளைகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்த வாய்ப்புள்ளது. இதுபோன்ற இழிவான செயற்பாடுகளால் பல திறமையான மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடவையாகவும் அமையும்.

கல்வி கற்கத் செல்லும் இடத்தில் ஒழுக்கக்கேடான செயலை தூண்டும் உப வேந்தரின் கருத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இது போன்ற அநாகரிக செயற்பாடுகளை கல்லூரிகளில் முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்துவதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும் நாகரீக பயன்பாடுகளையும் போதிக்கும் கருத்தரங்குகளை நடத்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளாக பிரகாசிக்க வழிவகுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கைக்குக் கண்டனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More