பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை - எஸ் சிறிதரன்

வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெறும் நிலையில், அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்;

இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக் கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திய அரசுகள் செயற்பட்டுக் கொண்டிருந்ததன் அடிப்படையில், ஓர் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது.

உருவாக்கப்பட்ட அந்த இடைக்கால நிர்வாகம் எழுத்துருவுடன் முடிவு பெற்றது. காரணம், அந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆசனங்கள், மற்றும் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.டின்.ரி.எல்.எப். ஆகியவற்றிற்கு ஆசனங்கள் எத்தனை, அதனைவிட தமிழுழ விடுதலைப் புலிகளிற்கு எத்தனை ஆசனங்கள் என்ற அடிப்படையில் இவ்வாறு இடைக்கால அரசாங்கமும் முன்மொழியப்பட்டது.

அவ்வாறான இடைக்கால நிர்வாகத்திற்கான தலைவர்களுக்கு மூன்று தலைவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டது. மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த பத்மநாதன் மற்றும் ரமேஸ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி வி கே சிவஞானம் ஆகிய மூவரது பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில், சி வி கே சிவஞானம் அவர்களை ஜே ஆர் ஜெயவர்த்தன தெரிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவும், இந்த இடைக்கால நிர்வாகம் இடையில் செயலிழந்து போகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாரின் எல்லை மீறிய அதிகார வரம்பு செயற்பாடுகளால் அந்த சுனாமி கட்டமைப்பும் செயற்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்டபொழுது உலக வங்கியினுடைய ஆதரவு இருந்தது.

நிதிகளை கையாள்வதற்கான முறையான கட்டமைப்பு உலக வங்கியின் கண்காணிப்பில் இருந்தது. அதற்கு முன்னர் இந்தியாவின் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் இந்தியாவின் மேற்பார்வையுடன் உருவாக்கப்பட்டது.

தற்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடைக்கால நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து, அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பது தொடர்பில் பத்திரிகைகளில் பார்க்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் கடந்த 5ம் மாதமே பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துரையாடியிருந்தோம்.

கடந்த 3ம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டத்தில் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பரிந்துரை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன். அது தொட்பில் பரிசீலிக்கலாம் என்ற செய்தி அங்கு சொல்லப்பட்டிருந்தது.

இப்பொழுது, தன்னால் எதுவும் செய்ய முடியாது, தன்னுடைய இயலுமையை இழந்துகொண்டு செல்கின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தான் இருப்பதாகவும், அக்கறை செலுத்துபவனாகவும் காட்டிக் கொள்வதற்காக அவர் இடைக்கால நிர்வாகம் பற்றி பேசுகின்றார்.

ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுகின்ற பொழுது, மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமானது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் கருத்துக்கள் ஏன் உருவாகுகின்றது என்றால், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற டயலஸ்போறா தமிழர்களுடைய முதலீடுகளை உள்ளுக்குள் கொண்டு வருவதுதான் மிக முக்கியமான நோக்கமாக இருக்கின்றது.

பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களுடைய பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, தற்காலிகமாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கினால், அதிலும் வடக்கு கிழக்கு இணைந்ததாக உருவாக்கப்பட்டு அதனை உலக வங்கி அல்லது ஐ எம் எப் அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் நிதிக்கையாளுகைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இப்பொழுது இருக்கின்ற நடைமுறைகள் போலவே, மத்திய அரசினுடைய திரைசேரிக் கூடாகத்தான் நிதியை பெற்று, வடக்கு கிழக்கிலே இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதென்றால், அது நடக்கக்கூடிய காரியமுமல்ல, அதுவொரு வீண்விரயமான காலமாகவும் மாறும்.

சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுது எவ்வாறு உலக வங்கி நிதி கண்காணிப்பை மேற்கொண்டதோ, 1987ம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்ட பொழுது இந்தியா எவ்வாறானதொரு பொறுப்பை எடுத்துக்கொண்டதோ, அதேபோல இப்பொழுதும் வடக்கு கிழக்கு இணைந்த, இரண்டையும் இணைப்பாக மேற்கொள்கின்ற இடைக்கால நிர்வாகத்தை வடக்கு கிழக்கிற்கான பொருளாதார அபிவிருத்திக்காகவும், மக்களுடைய இயல்பு வாழ்க்கை்காகவும் உருவாக்கப்படுகின்றபொழுது, இந்தியா பொறுப்பெற்க வேண்டும்.

இந்தியாவினுடைய பங்களிப்பில்லாமல் அதனை கையாள முடியாது. அது நடக்கக் கூடிய காரியமுமல்ல. அதேநேரம், பலம்வாய்ந்த நிதி அமைப்பு ஒன்றின் ஊடாக நிதிப்பொறுப்பு கையளிக்கப்பட்டு, அதன் ஊடாக வடக்கு கிழக்கில் தேங்கிப்பாயுற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வரும் டொலரை இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை தரும் வகையிலே கொண்டெடுக்கக்கூடியதாக இருக்கும்.

அதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்படுவாரானால், அவர் அந்த நல்லெண்ணமும், சிந்தனையும் கொண்டிருந்தால், ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க இருந்தபொழுதுதான் சிரான் பணியகம் உருவாக்கப்பட்டது. அதனைத்தான் சந்திரிக்கா அம்மையார் கலைத்திருந்தார். இந்த இடைக்கால நிர்வாகத்தின் நன்மைகள் பலருக்கும் தெரியும்.

உலகநாடுகளிடம் சென்று கூட்டம் வைத்து, விடுதலைப் புலிகள் காலத்திலேயே எவ்வாறு பணங்களை சேகரிக்கலாம் என்ற தந்துரோபாயம் ரணிலிற்கு தெரிந்ததாக இருந்தது. இப்பொழுதும் அவர் அதே தந்துரோபாயத்தை டயஸ்போரா அமைப்புக்களை வைத்துக்கொண்டு, அதாவது, தான் தடை நீக்கிய அமைப்புக்கள் ஊடாக நிதியை உள்ளீர்க்கின்ற ஓர் நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருக்கின்றார்.

அவர் சொல்வது இதைய சுத்தியானதும், நேர்மையானதுமான இருந்தால், இடைக்கால நிர்வாகமானது தமிழர் தரப்பிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழர்கள் அதனை நேர்மையான வழியில் செய்வதற்கு இந்தியாவின் நேரடி நெறிப்படுத்தலும், உலக நிதி நிறுவனத்தின் பாதுகாப்பும் அதற்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது இந்த இடைக்கால நிர்வாகம் இயங்க முடியாது என்பது, காலம் தந்த நிதர்சன உண்மையாகும்.

இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தீர்களா என ஊடகவியலாளர் இதன்போது வினவினார்,

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

எமது கட்சியை சேர்ந்தவர்களிற்கு அவ்வாறான அமைப்புகளுடன் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்கள், தொடர்புகள் இருக்கின்றனர். அதனை நான் நிராகரிக்கவில்லை. எங்களுடனும் சிலர் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இந்த தடைகள் நீக்கப்பட்ட பிற்பாடு, இதுவரை அவ்வாறான அமைப்புகளுடன் உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எவையும் இடம்பெற்றதாக எனக்கு தெரியவில்லை. எமது கட்சியில், நான் அறியாது யாரும் அவர்களுடன் பேசியிருந்தால் அது தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனாலும், கட்சி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மையானது என தெரிவித்தார்.

முதலீட்டுகள் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் அல்லது முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அவரிடம் வினவியபோது,

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்காலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலை உள்ளிட்ட பல்வேறு திட்ட மொழிவுகள் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. அதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்தவொரு அரசும் செவிசாய்க்காது கிடப்பில் போட்டுள்ளமை தொடர்பிலும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை - எஸ் சிறிதரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More