பூநகரி, மன்னாரில் வரவிருக்கும் காற்றாலை மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - சித்தார்த்தன்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பூநகரி, மன்னாரில் வரவிருக்கும் காற்றாலை மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - சித்தார்த்தன்

பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி தினம் (01) யாழ்ப்பாணத்தில் அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூநகரி, மன்னார் பகுதிகளிலே விலை மனு கோரப்படாமல் காற்றாலை மின் பிறப்பாக்கிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்திய முதலீட்டாளர்கள் இதற்கான முதலீட்டை செய்ய இருக்கின்றார்கள் என்ற செய்திகள் பரவிக் கொண்டு இருக்கின்றன.

இதிலே விலை மனு கோரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கின்றார்கள். அதே நேரத்தில் இந்த முதலீடுகள் வரவேண்டும் என சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

இந்த காற்றாலை மூலம் சமூகத்திற்கு பிரச்சனைகள் அல்லது பாதிப்புகள் ஏற்படடும் என கூறியுள்ளார்கள். விஞ்ஞான ரீதியாக அது எந்தளவுக்கு சரி என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும், இந்த விடயங்கள் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து இந்த முதலீட்டை செய்ய விடுவது சரி என்று தான் நான் நினைக்கிறேன்.

அது இந்திய கம்பனிகளாக இருக்கலாம் அல்லது வேறு கம்பனிகளாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் எமது மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு இருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரி, மன்னாரில் வரவிருக்கும் காற்றாலை மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - சித்தார்த்தன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)