புலம்பெயர் உறவுகளால் முதியோர் இல்லத்திற்கு உதவி

கிளிநொச்சி பீப்பிள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான K. விஜயராஜாவின் 50வது பிறந்த நாளான நேற்று குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.

வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களிற்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிற்றுண்டிகளும், இரவு உணவும் வழங்கி வைக்கப்பட்டது.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் கிளி பீப்பிள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான K. விஜயராஜா கிளிநொச்சி மாவட்டத்தில் அவ்வமைப்பின் ஊடாக பல்வேறு வாழ்வாதார உதவிகள் மற்றும் கற்றல் உதவிகள் என பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்த நிலையில் அவரது பிறந்த நாளான நேற்றைய தினம் முதியோர்களிற்கு உதவும் பணியை நேற்று முன்னெடுத்தார்.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் உள்ளிட்டவர்கள் அவர் சார்பில் முதியோர் இல்லத்தி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

புலம்பெயர் உறவுகளால் முதியோர் இல்லத்திற்கு உதவி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)