புத்த பெருமானின் போதனை - அரசியல் கைதிகள் விடுதலை - பச்சை கொடி காட்டுவாரா பிரதமர்?

புத்த பெருமானின் போதனையின் அடிப்படையில் அரசியல் கைதிகளை பிரதமர் விடுதலை செய்து தமிழ் மக்களிற்கு பச்சை கொடி காண்பிக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அபிவிருத்தியை விட உரிமையே முக்கியமாக காணப்படுகின்றது. அடுத்து வரும் நாட்கள் புத்த பெருமானுடைய முக்கியமான நாட்களாக இருப்பதனால் புத்த பெருமானின் போதனைகள் படி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் நாட்களாக உள்ளது.

இந்த நாட்களில் பிரதமர் பதவியை எடுத்துள்ள நிலையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தால் தமிழ் மக்களிற்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்படும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் ஏற்படும் முரண்பாடான நிலை மாறி இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மூவின மக்களிற்கும் இருக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் என்பது கொத்து கொத்தாக மக்கள் அழிந்த இடம் என்பது உலக நாடுகளிற்கு தெரியும். எத்தனையோ உறவுகள் நம்பிக்கையோடு வணங்கும் நாளாக அது அமைகின்றது. அந்த நாளிற்கு எந்தவொரு அடையும் இல்லாது இருக்க வேண்டும்.

அதேபோன்று நவம்பர் 27ம் திகதியும் எமது பிள்ளைகளை நாங்கள் வணங்குவதற்கும், உரிய முறையில் நாங்கள் அஞ்சலி செலுத்துவதற்குமாக அந்த நாளிலும் தடைகள் இல்லாமல் அந்தந்த இடங்களிலே நினைவேந்த செய்ய அனுமதிக்க வேண்டும்.

இராணுவம் அப்பகுதிகளிற்கு மக்களை உட்செல்ல விடாமல் தடுத்துள்ளது. அந்த நினைவேந்தலிற்கும் விடுவார்களாக இருந்தால் புதிய பிரதமரில் தமிழ் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும்.

அரசியல் கைதிகளாக உள்ளவர்களின் பிள்ளைகள் தமது தந்தையை காண்பதற்காக காத்திருக்கின்றார்கள். புத்த பெருமானின் போதனைப்படி அரசியல் கைதிகளை புதிய பிரதமர் விடுதலை செய்தார் என்ற செய்தி எமது காதுகளை அடைய வேண்டும்.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் உயிர்களை இழந்துள்ள நிலையில் அவற்றை மறந்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது அரசாங்கத்துடன் மறைமுகமாக இணைந்து செயற்படுவதாகவே பார்க்க முடிகின்றது.

வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் அமைச்ச பதவிகளை எடுத்து என்ன செய்தார்கள்? விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் என்ன விடயத்தினை முன்வைத்து அமைச்சு பதவியை எடுக்க போகின்றார் என்பது தெரியவில்லை. அது உண்மையில் தவறான விடயமாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து பின்னர் வெளியேறி பிந்துபோய் ஒரு தலைமை எடுத்து தனிப்பட அமைச்சு பதவியை எடுத்து செயற்படுவதென்பது கேலிக்கூத்தான விடயமாக இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

புத்த பெருமானின் போதனை - அரசியல் கைதிகள் விடுதலை - பச்சை கொடி காட்டுவாரா பிரதமர்?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More