
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புத்தளம், சேனைக் குடியிருப்பு மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்
சந்நிதியான் ஆச்சிரம நிதிப் பங்களிப்பில் புத்தளம், சேனைக் குடியிருப்பு பல்லின கிராம மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆம் திகதி சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் ஏற்பாட்டில் புத்தளம் - சேனைக் குடியிருப்பு , மணற்குன்று கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கண் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
இதில் 86 பயனாளிகள் கலந்து கொண்டு கண்ணாடிகளைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு 70 ஆயிரம் ரூபா நிதிப் பங்களிப்பில் மூக்கு கண்ணாடி புத்தளம் சேனைக்குடிருப்பில் வைத்து வழங்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)