பிரச்னைகளை தீர்க்க சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தினை வலுப்படுத்த வேண்டும் -  டக்ளஸ் தேவானந்தா

தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்னைகளை தீர்க்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில்;
உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அதற்கு மதிப்பளிக்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்படவேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது.

ஆனால் எத்தகைய பிரச்னைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.

இதன் காரணமாக புலிகள் எம்மில் பலரைக் கொலை செய்திருக்கின்றார்கள். என்னைக் கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்னைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வந்துள்ளோம்.

அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது.

இந்த அணுகு முறையினையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். வன்முறைகள் ஊடாக எமது பிரச்னைகளை தீர்க்க முடியாது.

எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை காண்போம். எமது எதிர்காலத்தையும் எமது தாய்நாட்டையும் பாதுகாப்போம் என்றார் டக்லஸ்.

பிரச்னைகளை தீர்க்க சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தினை வலுப்படுத்த வேண்டும் -  டக்ளஸ் தேவானந்தா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY