
posted 18th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பியசேன முன்னாள் எம்.பி. மரணம்
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. எச். பியசேன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் ஆலையடிவேம்பு பொது மயானம் அருகே நேற்று இடம்பெற்ற விபத்தில் சிக்கியே அவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பியசேனவும் தனியார் பேருந்தும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த பியசேன அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பியசேன, கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னர் இவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கட்சி தாவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)