
posted 16th August 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பிள்ளைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பனிமனையின் பிரதி பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன், பிராந்திய பல் வைத்திய அதிகாரி, கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார தாதி அதிகாரி, மேற் பார்வை குடும்ப நல உத்தியோகத்தர், குடும்பநல உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த பிரதேசத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 40 பிள்ளைகளுக்கு ஊட்டச்கத்து பால்மா வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)