
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பாராளுமன்ற குழு தலைவரை எம். பிக்களே தீர்மானிப்பார்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தொடர்பில் பாராளுமன்றக் குழு தீர்மானிப்பதே பொருத்தமானது. இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதனை நியமிக்க வேண்டும் என்று அவரின் கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு புளொட் தலைவர் த. சித்தார்த்தனும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று (10) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மேலும், பாராளுமன்றக் குழுத் தலைவர் விடயம் தொடர்பில் பிளவு ஏற்படாத வகையில்,ஒற்றுமையாக தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)