பாராளுமன்ற உறுப்பினரின் ஆசனம் வறிதாதல்

பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதியாக அப்பதவியினை 2022 யூலை 21 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொண்டதன் காரணமாக தனது கைப்பட எழுதி எனக்கு முகவரியிட்டனுப்பிய கடிதத்தின் மூலம் அத் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்துள்ளார் என்பதை எனக்கு அறிவித்துள்ளார் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் ஆணையாளருக்கு தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, அரசியலமைப்பின் 66(இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க 'பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் கீழ் தங்களுக்கு இத்தால் அறியத்தருகின்றேன் என தேர்தல் ஆணையாளருக்கு வியாழக்கிழமை (21.07.2022) தெரியப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஆசனம் வறிதாதல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 13.12.2025

Varisu - வாரிசு - 13.12.2025

Read More
Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More