posted 18th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலி
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கடந்த 15.08.2023 நள்ளிரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் இன்னும் சிறுவன் படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்காகியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் உடனடியாக உறவினர்களால் தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்திய சாலையினரால் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொறல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அன்றைய தினமே மூன்று மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)