பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும்

உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில் உலகம் முழுவதும் உள்ள ஆயுத படையினர் முகம்கொடுக்கவிருக்கும் புதிய போக்குகள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரியின் 17ஆவது பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரியின் 17ஆவது பட்டமளிப்பு விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் 148 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வருகையை அடையாளப்படுத்தும் வகையில் பாதுகாப்பு கல்லூரியின் சார்பில் ஜனாதிபதிக்கு நினைவுச் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டுகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகளை இலங்கையின் பாடநெறிகளுக்காக உள்வாங்குவதன் மூலம் பாதுகாப்பு கற்கைகளை நடைமுறைக்கு அமைவானதாக மாற்றக்கூடிய வாய்ப்புள்ளதெனவும் தெரிவித்தார்.

ஆசிய வலயத்தின் ஆயுத படையினர் சிறப்புத் திறன்களை கொண்டுள்ளனர் என்றும், அந்த திறன்களுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைப்பதால் நவீனமயமான பாதுகாப்பு படையொன்றை கட்டமைக்க முடியுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு உபாய மார்க்க விடயங்களை கற்பதற்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், கெடட் பயிற்சி பாடசாலை மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் பெரும்பணி ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல்களின் அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகளவில் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கான சில நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

தற்போதைய சர்வதேச மோதல்களை சில ஊடகங்கள் மக்கள் கருத்தாடல் வரையில் கொண்டு சென்றிருப்பதால் உலக மக்களின் பாதுகாப்புக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் என்றும், பாரம்பரிய பாதுகாப்பு முறைமைகளிலிருந்து விடுபட்டு நிலவுகின்ற மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ, பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரியின் படைத் தளபதி ஜெனரல் பீ.கே.ஜீ.எம்.எல். ரொட்ரிகோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More