
posted 23rd November 2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், திணைக்களம் நடத்திய தமிழ் இலக்கிய விழாவையொட்டி அரச ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட பாடல் போட்டியில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி. எம். கோபாலரத்தினம் தெரிவாகி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பாடல் போட்டியில், சிறந்த பாடகர்களாக தெரிவு செய்யப்பட்ட ஐவருள் ஒருவராக செயலாளர் கலாநிதி. கோபாலரத்தினமும் தெரிவாகி கௌரவம் பெற்றார்.
திருமலையில் நடந்த பண்பட்டலுவலக்ள் திணைக்களத்தின் தமிழ் இலக்கிய விழாவில், கலாநிதி கோபால ரெத்தினம், தனது பாடும் திறமையினை சிறப்பாக வெளிப்படுத்தியமைக்காகவும், அத்தோடு சிறந்த பணி ஆற்றுனர் என்பதற்காகவும் கௌரவிக்கப்பட்டார்.
விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இதற்கான சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பவற்றை கோபாலரெத்தினத்திற்கு வழங்கி கௌரவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY